×

சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமணம்: பிரபலங்கள் பங்கேற்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் சௌந்தர்யா – விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் சௌந்தர்யா – விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் சௌந்தர்யா – விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் சௌந்தர்யா – விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. 

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.  

 

இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், நக்கீரன் கோபால்  உள்ளிட்டவர்கள் திருமணத்துக்கு வருகை தந்தனர். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் திருமணத்துக்கு வருகை தந்தனர்.

சௌந்தர்யா பிங்க் கலர் புடவையிலும், விசாகன் பட்டு வேட்டியிலும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.  முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.