×

சௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமண வரவேற்பு: அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அசத்தல் வருகை!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று
 

நடிகர் ரஜினிகாந்தின் மகள்  சௌந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பில்  பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள்  சௌந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பில்  பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.  

இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், நக்கீரன் கோபால்  உள்ளிட்டவர்கள் திருமணத்துக்கு வருகை தந்தனர். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் திருமணத்துக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் திருமணத்தை அடுத்து நடைபெற்ற  வரவேற்பு நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி  மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் வருகை புரிந்தனர்.

இதை தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், நடிகை கஜோல் ஆகியோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.