×

சோனியா அகர்வால் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியானது

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 2003-ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் தீராத இடம் பிடித்தவர் சோனியா அகர்வால். காதல் கொண்டேன் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான கோவில், 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, புதுப்பேட்டை போன்ற படங்கள்
 

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

2003-ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் தீராத இடம் பிடித்தவர் சோனியா அகர்வால்.

காதல் கொண்டேன் திரைப்படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான கோவில், 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, புதுப்பேட்டை போன்ற படங்கள் அனைத்துமே ஹிட். 

ஆனால், சமீப காலமாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்துவந்த இவர், தற்போது சிவராமன் என்பவரது இயக்கத்தில் ‘தனிமை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தீனா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து, சோனியா அகர்வாலை மீண்டும் திறையில் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இப்படத்தின் கதைக்களம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.