×

சொன்னபடி 1 கோடி ரூபாய் வழங்கிய லதா மங்கேஷ்கர்?

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் கீ வீர் (Bharat ke Veer ) எனும் அரசு சாரா அமைப்பின் வங்கி கணக்கில் லதா மங்கேஷ்கர் ஒரு கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறார். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்திருந்தார். அதன்படி சொன்ன தொகையை வழங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
 

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் கீ வீர் (Bharat ke Veer ) எனும் அரசு சாரா அமைப்பின் வங்கி கணக்கில் லதா மங்கேஷ்கர் ஒரு கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்திருந்தார். அதன்படி சொன்ன தொகையை வழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிதி உதவி அளிக்கப்பட்டது. அதேபோல் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்தனர்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதற்கு பிரதமர் மோடி அவரை வெகுவாக பாராட்டியிருந்தார். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதி அளிப்பதாகவும் லதா அறிவித்தார். இந்நிலையில் அவர் சொன்னபடி 1 கோடி ரூபாயை அளித்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் கீ வீர் (Bharat ke Veer ) எனும் அரசு சாரா அமைப்பின் வங்கி கணக்கில் லதா மங்கேஷ்கர் ஒரு கோடி ரூபாய் செலுத்தியிருக்கிறார். இந்த அமைப்பு ராணுவ வீரர்களின் நலன் சார்ந்து இயங்கும் அமைப்பாகும். லதா மங்கேஷ்கர் வழங்கிய 1 கோடி ரூபாய் அல்லாமல், காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்துக்கு 11 லட்சம் ரூபாயை அளித்துள்ளது மங்கேஷ்கர் குடும்பம்.

திரைத்துறை பிரபலங்கள் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், சல்மான் கான் உள்ளிட்ட பலரும் கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

தேர்தலில் அதிரடி திருப்பங்களை உண்டாக்கும் அந்த வீடியோக்கள்; இன்று ரிலீசாகுமா?