×

சென்னையில் இருந்துகொண்டே ‘வீரம்’ தயாரிப்பாளரின் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ளாத தல அஜீத்…

தற்போது நம்பர் ஒன் மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை ஹீரோக்களையும் வைத்துப் படம் தயாரித்த விஜயா புரடக்ஷன்ஸ் வெங்கட்ராமி ரெட்டியின் இறுதி அஞ்சலிக்கு அவர் தயாரிப்பில் நடித்த ஒரு ஹீரோ கூட செல்லவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். தற்போது நம்பர் ஒன் மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை ஹீரோக்களையும் வைத்துப் படம் தயாரித்த விஜயா புரடக்ஷன்ஸ் வெங்கட்ராமி ரெட்டியின் இறுதி அஞ்சலிக்கு அவர் தயாரிப்பில் நடித்த ஒரு ஹீரோ கூட செல்லவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை
 

தற்போது நம்பர் ஒன் மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை ஹீரோக்களையும் வைத்துப் படம் தயாரித்த விஜயா புரடக்‌ஷன்ஸ் வெங்கட்ராமி ரெட்டியின் இறுதி அஞ்சலிக்கு அவர் தயாரிப்பில் நடித்த ஒரு ஹீரோ கூட செல்லவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது நம்பர் ஒன் மார்க்கெட்டில் இருக்கும் அத்தனை ஹீரோக்களையும் வைத்துப் படம் தயாரித்த விஜயா புரடக்‌ஷன்ஸ் வெங்கட்ராமி ரெட்டியின் இறுதி அஞ்சலிக்கு அவர் தயாரிப்பில் நடித்த ஒரு ஹீரோ கூட செல்லவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்  பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  பி.வெங்கட்ராம ரெட்டி  கடந்த வாரம் வெள்ளியன்று  மதியம் 1  மணியளவில்  இயற்கை  எய்தினார் . அவருக்கு  வயது 75. அவரது மனைவி பெயர் பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி ,அர்ச்சனா ரெட்டி. 

அவர்  ’தாமிரபரணி’ , ’படிக்காதவன்’, ’வேங்கை’ , ’வீரம்’ , ’பைரவா’ ஆகிய 5   படங்களை  தயாரித்துள்ளார் .  விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து சில தினங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்ட இவரது 6வது படமான ’சங்கத் தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பழகுவதற்கு மிகவும் இனியவரான வெங்கட்ராமி  ரெட்டி, ஒரு தயாரிப்பாளராக எதிலும் குறுக்கிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்புத் தளங்களுக்கே அபூர்வமாகத்தான் வருவார். அந்நிறுவனத்துக்கு சம்பள பாக்கிக்காக யாரும் போன் செய்யவேண்டியதில்லை. குறித்த தேதியில்  போனில் அழைத்து நிறுவனமே சம்பளத்தை செட்டில் செய்யும்.

அப்படிப்பட்டவருக்கு இறுதி மரியாதை செய்ய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு பிரபலங்களுமே கலந்து கொள்ளவில்லை என்றும் முக்கியமாக அவரது படங்களில் நடித்த அஜீத்,விஜய்,விஷால், தனுஷ் ஆகியோர் சென்னையில் இருந்துகொண்டே தவிர்த்தனர் என்றும் அவரது குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.