×

சூர்யாவின் என்.ஜி.கே படத்தின் வசூல் மொத்தம் இத்தனை கோடியா…?

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. செல்வ ராகவன்- சூர்யா காம்போவில் உருவான திரைப்படம் என்.ஜி.கே. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. இதில் கதாநாயகிகளாகச் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளனர். இந்த படத்தை
 

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

செல்வ ராகவன்- சூர்யா காம்போவில் உருவான திரைப்படம் என்.ஜி.கே. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. இதில் கதாநாயகிகளாகச் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளனர். இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர். 

இந்த நிலையில் படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் சூர்யா நடித்த எந்த படத்திலும் இது போன்று வசூல் 3 நாட்களில் நெருங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.