சூரரைப் போற்று படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர், மாறா என்ற தீம் பாடல் என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
என்.ஜி.கே, காப்பான் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துவருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர், மாறா என்ற தீம் பாடல் என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்து வெய்யோன் சில்லி பாடல் 100 அரசு பள்ளி மாணவர்களுடன் நடுவானில் விமானத்தில் பறந்தபடி வெளியானது.
இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.