×

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து தளபதிக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

விஜய் 64 படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் 64 படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் விஜய் 64 படத்தின் முதற்கட்ட பணிகளை அடுத்த மாதம் துவக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு
 

விஜய் 64 படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் 64 படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை  மாநகரம் பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் விஜய் 64 படத்தின் முதற்கட்ட பணிகளை அடுத்த மாதம் துவக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க  ராஷி கண்ணா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பாலிவுட் நடிகை நடிகை கியாரா அத்வானியின் பெயர்களும் அடிபடுகின்றன. அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக்  கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் 64 படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாகவும் கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் சேதுபதி ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.