×

சூப்பர் ஸ்டாரை சந்தித்த குஷ்பூ மகள்.. ஆனந்தத்தில் நன்றி தெரிவித்த குஷ்பூ !

குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168வது திரைப்படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு,
 

குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இந்த மாதம் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய ‘தலைவர் 168’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அனந்திதா ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகராம். 

இது குறித்து நடிகை குஷ்பூ அவரது ட்விட்டர் பக்கத்தில் தன் மகளுடன் புகைப்படம் எடுத்ததற்கு ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் இளைய மகளின் கனவு நனவாகி விட்டது. சூப்பர் ஸ்டாரை பார்த்த அந்த நிமிடம் அவளின் இதயத் துடிப்பு நின்று விட்டது. என் மகளை ஆசிர்வதித்ததற்கும், தங்களின் நேரத்தைச் செலவழித்து அவளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கும் நன்றி” என்று பதிவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அனந்திதா எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.