×

சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!?

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தர்பார் திரைப்படத்தின் பிரீமியர்
 

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அதற்கு முன்னதாகவே வெளிநாடுகளுக்குப் படத்தின் பிரதிகளை அனுப்பிவைக்க வேண்டும் என்பதால்  முன்னதாகவே படக்குழு  தர்பார் படத்தை தணிக்கைக்கு அனுப்பியது. 

இந்நிலையில், ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.