சீனாவில் புதிய சாதனை படைத்தது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சீனாவில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான ‘அவெஞ்சர்ஸ் சீரிஸ்’ உலகம் முழுவதும் பிரபலமானது. அப்படத்தின் 4-ம் பாகமான அவென்சர்ஸ் எண்ட் கேம் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை இந்தியாவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளன அவென்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் நேற்று சீனாவில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே 107 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது 750 கோடி ரூபாயாகும். இது தான் சீனாவில் முதல் நாளில் ஒரு திரைப்படம் பெற்றிருக்கும் அதிகபட்ச வசூலாகும்.
மேலும் நாளை இந்தியாவில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுப்போகியுள்ளன. இப்படியே வசூல் மழை பொழிந்து வந்தால் இத்திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆஃபிசில் புதிய சாதனைப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Thalaivar167; அசத்தலான தலைவர், அழகான நயன்தாரா – புகைப்படங்கள் உள்ளே?!..