×

சிவகார்த்திகேயன் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் யூடியூப் பிரபலம்?

நடிகர் சிவகார்த்திகேயனின் லோக்கல் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் பிரபலம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் லோக்கல் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் பிரபலம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீமராஜா படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷின் படத்தில் நடித்து வருகிறார். கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிஸ்டர் லோக்கல் என்று
 

நடிகர் சிவகார்த்திகேயனின் லோக்கல் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் பிரபலம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் லோக்கல் திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் பிரபலம் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீமராஜா படத்தை தொடர்ந்து நடிகர்  சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷின் படத்தில் நடித்து வருகிறார். கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மிஸ்டர் லோக்கல் என்று பெயரிட்ட இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கை கதாபாத்திரத்தில் யூடியூப் மூலம் பிரபலமான எரும சாணி ஹரிஜா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கெனவே அதர்வா நடித்து வரும் ‘100’ மற்றும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.