×

சினிமாவில் அரசியல் கட்சிகளை விமர்சிப்பது நாகரீகமற்ற செயல்: இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கருத்து!!

எடப்பாடி பழனிசாமி இந்த அரங்கத்திற்கு முதற்கட்டமாக ரூ.1 கோடி நிதியுதவியை நேற்று வழங்கினார். சென்னை: திரைப்படங்களில் அரசியல் ரீதியான விமர்சனங்களை வைத்து நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) சார்பில் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அரங்கத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அரங்கத்திற்கு முதற்கட்டமாக ரூ.1 கோடி நிதியுதவியை நேற்று வழங்கினார்.
 

எடப்பாடி பழனிசாமி  இந்த அரங்கத்திற்கு முதற்கட்டமாக  ரூ.1 கோடி நிதியுதவியை நேற்று  வழங்கினார்.

சென்னை: திரைப்படங்களில் அரசியல் ரீதியான விமர்சனங்களை வைத்து நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதைத் தவிர்க்கவேண்டும் என்று இயக்குநர்  ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) சார்பில் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள அம்மா அரங்கத்திற்கு ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 
அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இந்த அரங்கத்திற்கு முதற்கட்டமாக  ரூ.1 கோடி நிதியுதவியை நேற்று  வழங்கினார். இதை பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த  ஆர்.கே செல்வமணி , இதுவரை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசு திரைத்துறையுடன் இணக்கமாக உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் சினிமாவில் அரசியல் கட்சிகளை  விமர்சிக்கும் போக்கும் உள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், உண்மையில் கட்சிப் பாகுபாடுகளை மறந்து நாகரிகமற்ற முறையில் இதுமாதிரியான வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.