×

சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி..சேரனா இப்படி..?! ; அதிரவைத்த ‘ராஜாவுக்கு செக்’

இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தில் சேரனின் நடிப்பை பார்த்து பலரும் வாய்ப்பிளந்துள்ளனர். சென்னை: இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தில் சேரனின் நடிப்பை பார்த்து பலரும் வாய்ப்பிளந்துள்ளனர். இயக்குநர் சேரன் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார். பொதுவாக சேரன் தன் படங்களில் எளிமையான எதார்த்தமான கதாபாத்திரத்தையே தாங்கி நடிப்பார். ஆனால் ஆக்சன் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், இந்த திரைப்படத்தில் நடிக்க
 

இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தில் சேரனின் நடிப்பை பார்த்து பலரும் வாய்ப்பிளந்துள்ளனர். 

சென்னை: இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படத்தில் சேரனின் நடிப்பை பார்த்து பலரும் வாய்ப்பிளந்துள்ளனர். 

இயக்குநர் சேரன்  ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார். பொதுவாக சேரன் தன்  படங்களில் எளிமையான எதார்த்தமான கதாபாத்திரத்தையே தாங்கி நடிப்பார். ஆனால் ஆக்சன் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால்,  இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று நினைத்தே ஒப்பு கொண்டிருப்பார். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் ராஜாவுக்கு செக் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ப்ரிவியூ ஷோ சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. வழக்கமான காதல் செண்டிமெண்ட் கதாபாத்திரத்தில் தான்சேரன் தோன்றுவார் என்று நினைத்த பலருக்கு இந்த படத்தை காணும் போது  வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் சேரன் இப்படத்தில்,  துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளார். 

குறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும் த்ரில்லும் இருந்துகொண்டே இருந்ததும்,  அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட  த்ரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று படத்தை பார்த்தவர்கள் வாய் பிளந்துள்ளனர்.  இந்த தகவல் விநியோகஸ்தர்கள் காதுக்கு செல்ல படத்தின் வியாபாரம் எகிறியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.