×

‘சார்லி சாப்ளின் 2’-வில் பாடலாசிரியரான பிரபுதேவா..!

பிரபுதேவா நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெறும் ‘இவளா இவளா’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை: பிரபுதேவா நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெறும் ‘இவளா இவளா’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று
 

பிரபுதேவா நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெறும் ‘இவளா இவளா’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிரபுதேவா நடித்துள்ள ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெறும் ‘இவளா இவளா’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அம்ரீஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சின்ன மச்சான்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம் செந்தில்-ராஜலக்ஷ்மி ஜோடியாக பாடியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து ‘ஐ வாண்ட் மேரி மாமா’ பாடலையும் படக்குழு வெளியிட்டது. தற்போது ‘இவளா இவளா’ என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. பிரபுதேவா-நிக்கி கல்ராணி இருவரும் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.

டான்ஸர், டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா தற்போது பாடலாசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ‘இவளா இவளா’ பாடலை பிரபுதேவா எழுதியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.