×

சவுந்தர்யா மறுமணம்: பாதுகாப்பு கேட்கும் ரஜினிகாந்த் குடும்பம்!

சவுந்தர்யா ரஜிகாந்த் திருமணத்திற்காக லதா ரஜிகாந்த் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்று கொடுத்துள்ளார். சென்னை: சவுந்தர்யா ரஜிகாந்த் திருமணத்திற்காக லதா ரஜிகாந்த் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்று கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு
 

சவுந்தர்யா ரஜிகாந்த் திருமணத்திற்காக லதா ரஜிகாந்த் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்று கொடுத்துள்ளார்.

சென்னை: சவுந்தர்யா ரஜிகாந்த் திருமணத்திற்காக லதா ரஜிகாந்த் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்று கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ம் ஆண்டு  காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதையடுத்து சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபரின் மகனும் நடிகருமான விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல  நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்யாணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை E3 காவல் நிலையத்திற்கு வந்து மனு கொடுத்துள்ளார். 

அதில், வரும் 10 ஆம் தேதி எங்களது மகள் திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற இருப்பதால் இந்த கல்யாண விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்,தொழிலதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்  எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். மேலும்,அந்த மனுவில் பிப்ரவரி 10 ஆம் தேதி பிற்பகல் 3 மணிமுதல் இரவு 10 மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் என்றும், அதற்கடுத்து ஒருநாள் விட்டு பிப்ரவரி 12 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.