×

சர்ச்சை போஸ்டரை தொடர்ந்து ஜீவியின் ‘பேச்சலர்’ படத்தின் அடுத்த போஸ்டர் ரெடி!

இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், சான் லோகேஷ் படத்தொகுப்பும் செய்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சலர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் இசை மறுபக்கம் நடிப்பு, இதனிடையே சமூக சேவை என பிஸியாக இருக்கிறார் ஜீ.வி பிரகாஷ். இவர் அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வ பிரகாஷ் இயக்கத்தில் ‘Bachelor’ படத்தில் நடித்து வருகிறார். ரொமாண்டிக் கதையான இப்படத்தை Axess Film factory பேனரில் ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக
 

இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், சான் லோகேஷ் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சலர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் இசை மறுபக்கம் நடிப்பு, இதனிடையே சமூக சேவை என பிஸியாக  இருக்கிறார் ஜீ.வி பிரகாஷ். இவர் அறிமுக இயக்குநர் சதிஷ் செல்வ பிரகாஷ் இயக்கத்தில்  ‘Bachelor’ படத்தில் நடித்து வருகிறார். ரொமாண்டிக் கதையான இப்படத்தை Axess Film factory பேனரில் ஜி. டில்லி பாபு தயாரிக்கிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக  திவ்யபாரதி நடிக்கிறார். ஜீ.வி பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், சான் லோகேஷ் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

இந்நிலையில் ‘பேச்சலர்’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில், பெண்ணின் கால்களுக்கு இடையில் தலை சாய்த்து ஜீ.வி பிரகாஷ் படுத்திருப்பது போல போஸ்டர் அமைந்திருந்தது. இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.  இவர் அடல்ட் மூவிஸ் மட்டும் தான் நடிப்பாரு போல என்று ஜீ.வி பிரகாஷை இணையத்தில் பலரும் சாடி வந்தனர். 

தற்போது புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டர்,  அதேமாதிரி  இருந்தாலும், திட்டும் அளவுக்கு மோசமாக இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.