சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் ’சொக்க வைக்கும் சின்ன வீடு’… நண்டு சிண்டு எல்லாம் வைச்சிருக்கும்போது இவருக்கு இருக்கக்கூடாதா..?
தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா ஸ்டோர் அருள். அதை விட இப்போது ஹைலைட் ஆகி வருகிறது திருநெல்வேலியில் உள்ள அவரது சின்ன வீடு.
தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா ஸ்டோர் அருள். அதை விட இப்போது ஹைலைட் ஆகி வருகிறது திருநெல்வேலியில் உள்ள அவரது சின்ன வீடு.
செல்வரத்தினம் மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் கடைகளை பிரம்மாண்டப்படுத்தி வருகிறார். இந்தக் கடைகளை நாடு முழுவதும் பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்கி வருகிறார் அருள்.
விளம்பரங்களில் பிரம்மாண்டம் காட்டிய அருள் அடுத்து இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளார். (இவர் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரி கொடுப்பதை அறித்த அஜித், விஜய், சூர்யா என முன்னணி நாயகர்கள் கலக்கத்தில் இருப்பது தனிக்கதை)
சென்னையில் அண்ணாச்சிக்கு பிரம்மாண்டமாய் பல துணிக்கடை மாளிகைகள் இருப்பதை போல பலகோடி ரூபாய் மதிப்பில் சில சொகுசு வீடுகளையும் கட்டியிருக்கிறார் அருள். அதில் தான் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் அவர். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் சின்ன வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார் அருள். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன.
இந்த வீட்டை பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார்.
கூடுதல் தகவல்… ஜேடி ஜெர்ரி இயக்கும் படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை கேட்டு வருகிறார்களாம்..