×

சமையல் கில்லாடியும், யூடியூப் ஸ்டாருமான நாராயணா ரெட்டி உயிரிழப்பு! 

யூடியூப் பிரபலங்களில் ஒருவரான நாராயணா ரெட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். யூடியூப் பிரபலங்களில் ஒருவரான நாராயணா ரெட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். Grandpa Kirtchen என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் நாராயணா ரெட்டி தெலங்கானாவை சேர்ந்தவர். 73 வயதாகும் இவரை யூடியூபில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கொன்றனர். குறிப்பாக இவரின் விதவிதமான அசைவ உணவுகளுக்கு ஏராளமானோர் அடிமை என்றே கூறலாம். கிராமத்தின் மணம் வீசும் வகையில் இவர் சமைக்கும் பிரியாணி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். அசைவ
 

யூடியூப் பிரபலங்களில் ஒருவரான நாராயணா ரெட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

யூடியூப் பிரபலங்களில் ஒருவரான நாராயணா ரெட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

Grandpa Kirtchen என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் நாராயணா ரெட்டி தெலங்கானாவை சேர்ந்தவர். 73 வயதாகும் இவரை யூடியூபில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கொன்றனர். குறிப்பாக இவரின் விதவிதமான அசைவ உணவுகளுக்கு ஏராளமானோர் அடிமை என்றே கூறலாம். கிராமத்தின் மணம் வீசும் வகையில் இவர் சமைக்கும் பிரியாணி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். 

அசைவ உணவுகள் மட்டுமின்றி நொறுக்குத் தீனி செய்வதிலும் கைத்தேர்ந்தவர். சாக்லேட் கேக், பீட்சா போன்றவற்றை சமைத்து இவர் பதிவிடும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சமையலில் கில்லாடியாக யூடியூபில் வலம் வந்த இவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.  அவரது மறைவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.