×

சமூக வலைதளத்தில் இணைகிறேன்… நடிகர் அஜித்தின் போலி அறிக்கை!

நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அஜித்தின் கையெழுத்துடன் வெளியான அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த
 

நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அஜித்தின் கையெழுத்துடன் வெளியான அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்”என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது போலியான கடிதம் என்றும், அவரது அறிக்கைகள் தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து தான் வெளியிடப்படும் என்றும் அதுவும் தமிழில் வெளியிடப்படாது என்றும் அஜித் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.