×

சபரிமலைக்கு போய் என்ன சாதிக்க போறீங்க: பெண்களை விளாசிய பிக் பாஸ் காயத்ரி

சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களை பிக் பாஸ் காயத்ரி சரமாரியாக விளாசியுள்ளார். சென்னை: சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களை பிக் பாஸ் காயத்ரி சரமாரியாக விளாசியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல்ல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலை தொடர்பான போராட்டங்கள் வலுத்த
 

சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களை பிக் பாஸ் காயத்ரி சரமாரியாக விளாசியுள்ளார்.

சென்னை: சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களை பிக் பாஸ் காயத்ரி சரமாரியாக விளாசியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல்ல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சபரிமலை தொடர்பான போராட்டங்கள் வலுத்த நிலையிலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தப்போவதாக கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், மார்கழி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து, பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 12 பெண்கள் சபரிமலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்கள் கோவிலுக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்கள் தீவிர போரட்டத்தில் ஈடுபட்டதால், எதிர்ப்பை மீறி அவர்களால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.

இது தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் காயத்ரி, சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களை கடுமையாக விளாசி ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரிய வழக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத பெண்கள், ஏன் அங்கு செல்ல வேண்டும் என புரியவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே அங்கு செல்ல அடம்பிடிக்கின்றார்கள். இதனால் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? நீங்கள் உண்மையில் ஐயப்பன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்றால் 50 வயது வரை பொறுத்திருந்து பின்னர் கோவிலுக்கு செல்லுங்கள். இத்தனை ஆண்டுகளாக இருந்த வழக்கத்தை பின்பற்றுங்கள் என்று ட்வீட்டியுள்ளார்.