×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ’விஜய் 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த `மாஸ்டர்’ படம் விரைவில் திரையரங்கில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’விஜய் 65’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கான முதற்கட்டப்
 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த `மாஸ்டர்’ படம் விரைவில் திரையரங்கில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’விஜய் 65’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது நெல்சன், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக நயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’, படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடதக்கது.