×

“சங்கமே அபராதத்துல தான் ஓடுது” மறுதேர்தல் நடத்த கூட நடிகர் சங்கத்தில் பணமில்லை : நடிகர் கருணாஸ் பரபரப்பு தகவல்!

எங்கள் போராட்டம் சட்ட போராட்டம். எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். நடிகர் சங்க சொத்து என்பது தனிநபர் சொத்து இல்லை. புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் நடிகர் சங்கம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘எங்கள் தரப்பை ஐசரி கணேஷ் விமர்சனம் செய்கிறார். எங்கள் போராட்டம் சட்ட போராட்டம். எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். நடிகர்
 

எங்கள் போராட்டம் சட்ட போராட்டம். எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். நடிகர் சங்க சொத்து என்பது தனிநபர் சொத்து இல்லை.

புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகரும் எம்எல்ஏவுமான  கருணாஸ் கலந்துகொண்டார்.  அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் நடிகர் சங்கம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘எங்கள் தரப்பை ஐசரி கணேஷ் விமர்சனம் செய்கிறார். எங்கள் போராட்டம் சட்ட போராட்டம். எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.

நடிகர் சங்க சொத்து என்பது தனிநபர் சொத்து இல்லை. அதை யாருமே சொந்தம் கொண்டாட முடியாது. நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல. பதவிக்காக பல லட்சங்களை செலவு செய்ய நான் முட்டாளும் இல்லை. சங்கமே முடங்கி போயுள்ளது. சங்கத்தில் பணமே இல்லை. நீதிமன்றம் மறுதேர்தல் நடந்த சொல்லியிருந்தாலும் அதை நடத்த கூட சங்கத்தில் பணம் இல்லை’ என்று பரபரப்பு கருத்துக்களை கூறியுள்ளார். 

நடிகர் கருணாஸ் விஷால், நாசர் அணியான பாண்டவர் அணியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே நடந்த தேர்தலை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த நீதிபதி உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.