×

கோவா திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு சிறப்பு சாதனையாளர் விருது!

நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார். கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் தொடக்க விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் துவக்கிவைத்தார். மேலும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார். அத்துடன் இந்திய சினிமா துறையில் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக ஆற்றிவரும் நடிகர்கள்
 

நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE”  என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார்.

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் தொடக்க விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் துவக்கிவைத்தார். மேலும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE”  என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார்.

அத்துடன்  இந்திய சினிமா துறையில் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக ஆற்றிவரும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்நிலையில் நேற்று நிறைவு விழாவையொட்டி,  இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்து ஜாம்பவானாக வாழ்ந்து வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, சிறப்பு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.மேலும்  நடிகர் அரவிந்த்சாமிக்கும்  இந்த நிகழ்ச்சியில் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேபோல் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருது ஜல்லிக்கட்டு படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசேரிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.