கோல்டன் குளோப் விருது : ஒத்த செருப்புக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் பறந்த பார்த்திபன்
இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டி வருகின்றனர்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படத்தை கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பார்த்திபனின் புதியபாதை படத்தில் என்னை தான் நடிக்க கேட்டார்கள். அப்போது என்னிடம் கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. அதற்காக நான் வருந்தவில்லை. நான் நடித்திருந்தால் பார்த்திபன் மாதிரி ஒரு அருமையான நடிகர் திரையுலகிற்குக் கிடைக்காமல் போயிருப்பார்.
மேலும் பார்த்திபன் தனது மற்றொரு பதிவில், ‘ஒத்த செருப்பு திரைப்படத்தை கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சிக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸின் ஹர்கின் செரிடாஸ் திரையரங்கில் ஒத்த செருப்பு திரையிடல் நடைபெறுகிறது. ரசிகர்கள் அங்கு வந்து தன்னை சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.