×

கோலமாவு கோகிலா பட இயக்குநரோடு கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். அதையடுத்து மெரினா பட இயக்குநர் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படங்களில் நடிக்கவுள்ளதாக
 

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அதையடுத்து மெரினா பட இயக்குநர் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

மேலும் இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஹேய் ரவுடி; விஜய் தேவரகொண்டா புகைப்படத்தை பதிவிட்டு இயக்குனரை வம்பிழுத்த கியாரா