×

கைதி இந்தி ரீமேக்கில் ஹீரோ இவர்தானாம்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த
 

முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான  கைதி படம் கடந்த அக்டோபர்  மாதம் வெளியானது. ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில்  நரேன், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.   ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள கைதி படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

 

இதையடுத்து  கைதி  இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இப்படத்தை  ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 


 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஆமாம், நான் தான் கைதி ஹிந்தி ரீமேக்கில் நடிக்கிறேன், படம் பிப்ரவரி 12, 2021 வெளியாகும்” என தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.