×

‘குஷி 2’-வில் நிச்சயம் நடிப்பேன்.. ஆனா..?: கண்டிஷன் போடும் ஜோதிகா!

‘குஷி 2’ திரைப்படம் உருவானால் கண்டிப்பாக நடிப்பேன் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். சென்னை: ‘குஷி 2’ திரைப்படம் உருவானால் கண்டிப்பாக நடிப்பேன் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். ’36 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக துவக்கியவர் நடிகை ஜோதிகா. அதைத் தொடர்ந்து, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செக்கச்சிவந்த வானம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது ‘மொழி’ பட இயக்குநரின் ‘காற்றின் மொழி’ என்ற படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில்
 

‘குஷி 2’ திரைப்படம் உருவானால் கண்டிப்பாக நடிப்பேன் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘குஷி 2’ திரைப்படம் உருவானால் கண்டிப்பாக நடிப்பேன் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

’36 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக துவக்கியவர் நடிகை ஜோதிகா. அதைத் தொடர்ந்து, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செக்கச்சிவந்த வானம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது ‘மொழி’ பட இயக்குநரின் ‘காற்றின் மொழி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்த ‘தும்ஹாரி சுலு’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் ஆர்ஜே கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வரும் நவ.16ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜோதிகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரது திரை பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய குஷி படம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். ‘குஷி 2’ திரைப்படம் உருவானால் நிச்சயமாக நடிப்பேன். ஆனால் தன்னுடைய கதாபாத்திரம் சற்று முதிர்ச்சியுடனும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, கீர்த்தி சுரேஷின் ‘மகாநடி’ உள்ளிட்ட படங்களில் அவர்களது நடிப்பை வெகுவாக பாராட்டினார். தனக்கும் பயோபிக் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளதாக தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, ஜோதிகா யாருடைய பயோபிக் படத்தில் நடிக்கலாம் என ரசிகர்கள் சிலரை பரிந்துரை செய்து வருகின்றனர்.