×

குழந்தையை கொஞ்சி மகிழும் எமி ஜாக்சன்: வைரல் வீடியோ!

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். நடிகை எமி ஜாக்சன் தனது ஒருமாத குழந்தையை கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார வரம்பை மீறாதவர் என்றே
 

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன்.

நடிகை எமி ஜாக்சன் தனது ஒருமாத குழந்தையை கொஞ்சும் வீடியோ ஒன்று  இணையத்தில் வெளியாகியுள்ளது. 

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி  வீசியவர் எமி.

இதையடுத்து எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமாக இருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். எமியின் இந்த அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் பூகம்பத்தைக் கிளப்பியது. இருப்பினும் ஒரு தாயின் மனப்பக்குவத்தை எமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து  கடந்த மாதம் எமி ஜாக்சனுக்கு ஆண்  குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது ஒரு மாத குழந்தையைக் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். தன்னை மறந்து குழந்தையை அழகாகக் கொஞ்சி மகிழும் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவை அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.