×

குறளரசன் திருமணம்: கமல்ஹாசனை நேரில் சென்று அழைப்பு விடுத்த டி.ராஜேந்தர்!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் சிம்பு. இவரது தம்பி குறளரசன் இயக்குநர் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனிடையே இஸ்லாமியப் பெண்ணான நபீலா ஆர். அஹமத்.
 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில்  சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் சிம்பு. இவரது தம்பி குறளரசன் இயக்குநர் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

இதனிடையே இஸ்லாமியப் பெண்ணான  நபீலா ஆர். அஹமத். என்பவரை குறளரசன் காதலித்து வந்த நிலையில்  கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதை தொடர்ந்து குறளரசன் – நபீலா ஆர். அஹமத் ஆகியோரின்  திருமண வரவேற்பு இருவீட்டார் சம்மதத்துடன் வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் குறளரசனின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக குறளரசன் திருமண அழைப்பிதழை டி.ராஜேந்தர் நேற்று நேரில் சென்று  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் வழங்கியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக நடிகர் விஜயகாந்தை மற்றும் ரஜினிகாந்தை சந்தித்து டி.ராஜேந்தர் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.