×

குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா? திரௌபதி படத்தை விளாசிய பிரபல இயக்குநர்; டிவிட்டரில் மோதல்!

டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கருணாஸ், ஜீவா ரவி, பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும்
 

டிரைலர்  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில்  நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர்  வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர்  நவீனிடம், சார் திரெளபதி படத்தைப் பற்றிய தங்களது கருத்து… தயவுசெய்து என்று ஒருவர் கேட்க, ‘குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா?’ என்று கடுப்பாக பதிலளித்துள்ளார். 

இதற்கு படத்தின் இயக்குநர் மோகன் ஜி, அவர் அவர் எண்ணம் போல அவர் அவர் கருத்து அமையும்.. “எண்ணம் போல வாழ்க்கை”.. பல காவியங்கள் படைத்திட வாழ்த்துக்கள் டோலர்… என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

 இதை கண்ட சிலர், ‘நீ ஜாதி பத்தி படம் எடுத்து டிவிட்டரில் பேசியதால் உன்னை தெரியும்.இல்லனா ஒரு நாய்க்கு கூட உன்னை தெரியாது.. ஜாதி நாயே’  என்று மோகன் ஜி-க்கு எதிராகவும், ‘Mohan G இவனெல்லாம் ஒரு ஆளு! இவனுக்கெல்லாம் Reply பண்ணி உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்! அவனை மாதிரி குப்பைகளுக்குதான் #திரெளபதி திரைப்படம்! கண்டிப்பா அவனை திருத்தும்! அதுதான் #திரெளபதியின் வெற்றி’ என்று ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.