×

குடியுரிமை திருத்தச் சட்டம்: ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய அமலா பால்

மேலும் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி, கர்நாடகா, பெங்களூர், உத்தரபிரதேசம், ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும்
 

மேலும் பதற்றத்தைத்  தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி, கர்நாடகா, பெங்களூர், உத்தரபிரதேசம், ஐதராபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் பதற்றத்தைத்  தவிர்க்கும் வகையில் டெல்லியில் செல்போன் சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட்  நடிகர்கள் வரை திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் இதுகுறித்து ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பெண் ஒருவர் கையில் ஏந்தியுள்ள பதாகையில், நான் ஒரு இந்தியன்…இந்தியன் என்பது கிறிஸ்தவர், இஸ்லாமியர், ஜெயின், புத்திஸ்ட், சீக்கியர் என அனைவரும் அடக்கம்’ என்பதை சொல்வதைப் போல அந்த புகைப்படம் அமைந்துள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் அமலா பாலை  வெகுவாக பாராட்டி வருகின்றனர்.