×

குடிக்கு அடிமையானேன்…ஆனாலும் சிக்ஸ் பேக் வைக்க இதுதான் காரணம்: விஷ்ணு விஷாலின் வைரல் வீடியோ!

ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியது வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது தோழி ரஜினியை திருமணம் கொண்டார்.
 

ஜூவாலா  குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியது

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்   இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது  தோழி ரஜினியை  திருமணம்  கொண்டார்.

 

இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து விஷ்ணு விஷால்  பிரபல  பேட்மிண்டன்  வீராங்கனை  ஜூவாலா  குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியது. 

சமீபத்தில் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில்  விவாகரத்தால் மது பழக்கம்,  தவறான உணவுப்பழக்கம், மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு விட்டேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் விஷ்ணு விஷால் தான் சிக்ஸ் பேக் வைத்ததற்கான காரணத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில், ‘சினிமாவுக்கு வந்த பிறகு தான் குடிக்கு அடிமையானேன். முதலில்  சோசியல் ட்ரிங்கிங்  என்று தான் ஆரம்பித்தேன். பிறகு அப்படியே அதற்கு அடிமையானேன். இது எனக்கே பிடிக்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக நான் ஆல்கஹாலை தொடவில்லை. இதுவரை செய்ய முடியாத ஒன்றை செய்யும் போது  பாசிட்டிவ் எண்ணம் உருவாகும் என்று நினைத்து தான்  சிக்ஸ் பேக் வைத்தேன். இது என் நீண்ட நாள் கனவின் முதல் படி என்று சொல்லலாம்’ என்று கூறியுள்ளார்.