×

காப்பான் படம் 2011 லேயே உருவாகியது, பொய் வழக்கு தொடந்த ஜான் சார்லஸ்: கே.வி.ஆனந்த் பேட்டி

காப்பான் திரைப்படத்தின் கதை 2011 லேயே உருவாகியதாகவும், ஜான் சார்லஸ் தன்னை சந்தித்து கதையை கூறியது பொய் என்றும் தெரிவித்துள்ளார், இயக்குனர் கே.வி. ஆனந்த். காப்பான் திரைப்படத்தின் கதை 2011 லேயே உருவாகியதாகவும், ஜான் சார்லஸ் தன்னை சந்தித்து கதையை கூறியது பொய் என்றும் தெரிவித்துள்ளார், இயக்குனர் கே.வி. ஆனந்த். காப்பான் திரைப்படம் வெளியாகக் கூடாது என்று சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில்
 

காப்பான் திரைப்படத்தின் கதை 2011 லேயே உருவாகியதாகவும், ஜான் சார்லஸ் தன்னை சந்தித்து கதையை கூறியது பொய் என்றும் தெரிவித்துள்ளார், இயக்குனர் கே.வி. ஆனந்த்.

காப்பான் திரைப்படத்தின் கதை 2011 லேயே உருவாகியதாகவும், ஜான் சார்லஸ் தன்னை சந்தித்து கதையை கூறியது பொய் என்றும் தெரிவித்துள்ளார், இயக்குனர் கே.வி. ஆனந்த்.

காப்பான் திரைப்படம் வெளியாகக் கூடாது என்று சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் கதை எழுதி வருவதாகவும், 2012 ஆம் ஆண்டு ‘சரவெடி’ என்ற கதையை அவர் எழுதி இயக்குனர் கே.வி. ஆனந்திடம் கூறியதாகக் கூறியுள்ளார். அப்போது கே.வி ஆனந்த் அந்த கதையை உள்வாங்கிக் கொண்டு இந்த கதையை தயாரிக்கும் போது வாய்ப்பு தருவதாக கூறியதாக வழக்கில் தெரிவித்தார். தற்போது அந்த கதையின் தலைப்பை மற்றும் மாற்றி காப்பான் என்று வைத்து இயக்கி இருப்பதாகக்  கூறி அப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் சார்லஸ்.

 

இன்று அந்த வழக்கின்  முடிவு, கே.வி.ஆனந்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், இன்று சென்னையில் பேசிய அவர் காப்பான் திரைப்படம் 2011 லேயே பட்டுக்கோட்டை பிரபாகரனுடன் இணைந்து உருவாக்கப் பட்டது என்றும், ஜான் சார்லஸ் என்னை நேரில் சந்தித்து கதை சொன்னதாக தெரிவித்தது பொய் என்றும் தெரிவித்தார். மேலும், காப்பான் திரைப்படம் பிரதமர் பாதுகாப்பு பற்றியது, இதில் நதிநீர் பங்கீட்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றும் கூறியுள்ளார். இதனை குறித்து பட்டுக் கோட்டை பிரபாகர், பெரிய படங்களை குறி வைத்தே புகார் எழுவதில் ஏதோ உள்ளது என்று கூறியுள்ளார்.