×

காத்திருந்தது போதும்: தளபதி 63 படத்தின் டைட்டில் இது தான்?

நடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கி வரும் தளபதி 63 படத்தில் விஜய் தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மகனாக வரும் விஜய் கதாபாத்திரத்துக்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே கூறப்பட்டது. அதே போன்று கதாநாயகி நயன்தாரா ஏஞ்சல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தற்போது கூறப்படுகிறது. தற்காலிகமாக தளபதி
 

நடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் விஜயின் தளபதி 63 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அட்லீ இயக்கி வரும் தளபதி 63 படத்தில் விஜய் தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மகனாக வரும் விஜய் கதாபாத்திரத்துக்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கெனவே கூறப்பட்டது. அதே போன்று கதாநாயகி நயன்தாரா ஏஞ்சல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தற்போது கூறப்படுகிறது. 

தற்காலிகமாக தளபதி 63 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அர்ச்சனா கல்பாத்தி ஜூன் 21ஆம் தேதி(இன்று) மாலை 5.59 வரை மட்டுமே தளபதி 63 ஹேஸ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் விஜய்யின் பிறந்தநாள் அன்று ஜூன் 22 ஆம் தேதி செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் தளபதி 63 படத்திற்கு நாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது தான் உண்மையான தலைப்பா என்று,  இன்று மாலை வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வரும்.