×

காணாமல் போன சர்கார்: இலவச பொருட்களை மக்களுக்கு வழங்கிய விஜய் ரசிகர்கள்!

சர்கார் படத்தின் போது, இலவசங்களைத் தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி: சர்கார் படத்தின் போது, இலவசங்களைத் தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படமான சர்காரில் அரசு கொடுத்த இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பார்த்த விஜய் ரசிகர்களும் தங்களது வீடுகளில்
 

சர்கார் படத்தின் போது, இலவசங்களைத் தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி: சர்கார் படத்தின் போது, இலவசங்களைத் தீயிட்டு கொளுத்திய விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படமான சர்காரில் அரசு கொடுத்த இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை பார்த்த விஜய் ரசிகர்களும் தங்களது வீடுகளில் இருக்கும் இலவச பொருட்களை உடைப்பது, எரிப்பது போன்ற வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில்  இலவச பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் தற்போது மக்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை  வழங்கி வருகின்றனர். அதற்கான புகைப்படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது. சர்கார் வெளியீட்டின் போது, இலவச பொருட்கள் விவாத பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.