×

கவுரவம் பார்க்காமல் மனைவிக்கு ஷூ லெஸ் கட்டிவிட்ட பிரபல நடிகையின் கணவர்: வைரலாகும் புகைப்படம்!

நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் ஷூ லேஸ் கட்டிவிடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புதுடெல்லி: நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் ஷூ லேஸ் கட்டிவிடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பியும் பாலிவுட் நடிகருமான அனில் கபூரின் மகள்தான் சோனம் கபூர். இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, டெல்லி 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட்
 

நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் ஷூ லேஸ் கட்டிவிடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதுடெல்லி: நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் ஷூ லேஸ் கட்டிவிடும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பியும் பாலிவுட் நடிகருமான அனில் கபூரின் மகள்தான் சோனம் கபூர். இந்தியில் நடிகர் தனுஷ் நடித்த ராஞ்சனா, டெல்லி 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராய் வலம் வருகிறார். மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவருக்கு, ‘நீரஜா’ படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. 

இதையடுத்து கடந்த ஆண்டு மே  மாதம் நீண்ட நாள் காதலரான ஆனந்த அவுஜா திருமணம் செய்து கொண்டார். மும்பை பாந்த்ராவில் நடந்த இந்த திருமணத்தில், நண்பர்கள், குடும்பத்தார் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நடித்து வரும் சோனம் அவ்வப்போது கணவருடன் எடுக்கும் செல்பிக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

 

இந்நிலையில் டெல்லியில் கடை திறப்பு விழா ஒன்றில், கணவருடன் கலந்து கொண்ட சோனம் கபூர் மஞ்சள் நிற ஆடையில், கணவர் அணிந்திருந்த அதே மாடல் ஷூவை அணிந்து ஸ்டைலாக வலம்வந்தார். அப்போது சோனம் கபூரின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட, அதனை பொது இடம் என்று கூட பார்க்காமல், அவரது கணவர் ஆனந்த் கட்டி விட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் வாசிக்க: துப்பு கொடுத்து கொலைகாரனை கண்டு பிடிக்கச் சொன்ன விஜய் ஆண்டனி!