×

கர்ப்பமாக உள்ள ஆல்யா மானஸாவுக்கு ஏற்பட இருந்த ஆபத்து…கடைசியில் காப்பாற்றிய சீரியல் பிரபலங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆல்யா மானஸா 7 மாதம் கர்ப்பமாகவுள்ளார். இருப்பினும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். இந்த ஜோடி சமீபத்தில் நியூ இயரை கொண்டாடும் விதமாக சக விஜய் டிவி நண்பர்களுடன் சேர்ந்து கோத்தகிரி சென்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கூட வைரலானது. இந்நிலையில் இந்த
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் தன்னுடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக்கை  காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆல்யா மானஸா 7 மாதம் கர்ப்பமாகவுள்ளார். இருப்பினும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். 

இந்த ஜோடி சமீபத்தில்  நியூ இயரை  கொண்டாடும் விதமாக சக விஜய் டிவி நண்பர்களுடன் சேர்ந்து கோத்தகிரி சென்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கூட வைரலானது. 

 

இந்நிலையில் இந்த பயணத்தின் போது நடிகை ஆல்யா மானஸா ஏற்படவிருந்த விபத்து குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கோத்தகிரி பயணத்தின் போது  விஜய் டிவி பிரபலங்கள் மலை ஏறமுற்பட்டுள்ளது. அப்போது ஆல்யா மானஸாகர்ப்பமாக இருப்பதால் அவரும் கணவர் சஞ்சீவ் கார்த்தியும் ஒரு இடத்தில் காத்திருந்திருந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் நேரம் அதிகமானதால் அவர்கள் ஜீப்பில் செல்ல புறப்பட்டனர். அப்போது யானைகள் நடமாடும் பகுதியில் ஜீப் நின்றுள்ளது. இதனால் அவர்கள் பதட்டமாகியுள்ளனர்.  இதுகுறித்து அறிந்த இயக்குநர் பிரவீன் பென்னட் மற்றும் ஈரமான ரோஜாவே சீரியல் நாயகன் திரவியம் இருவரும் தங்களது ஜீப்பில் வந்து அவர்களை மீட்டு  சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடந்து ஒருமாதம் ஆன நிலையில்  இந்த தகவலை தற்போது அறிந்துள்ள ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.