×

கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்து ருசிகர தகவல்! 

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்காக லொகேஷன் தேடு பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்காக லொகேஷன் தேடு பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 23 ஆண்டுகளுக்குக் கழித்து கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் இந்தியன் 2. மிக பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
 

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்காக லொகேஷன் தேடு பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திற்காக லொகேஷன் தேடு பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 

23 ஆண்டுகளுக்குக் கழித்து கமல்ஹாசன்- ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் இந்தியன் 2. மிக பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். 

மேலும் இதில் நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகவும், படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்தி பார்த்துத்திருந்தோம். 

இந்த நிலையில் தற்போது, இயக்குநர் ஷங்கர் மற்றும் பட குழுவினர் ஆந்திராவில் லொகேஷன் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.