×

கமல்-60 பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஹைலைட்ஸ்… சர்ப்ரைஸ் கொடுக்கும் ‘தல’..

நிகழ்ச்சியில் ரத்த தானம் கொடுப்பது,நலத்திட்ட உதவிகள் என்று அவரது ரசிகர்கள் அமர்களப்படுத்துவார்கள். உலக நாயகன் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி தமிழம் முழுக்க கமல் நற்பணி இயக்கத்தின் சார்பாக எளிமையாக கொண்டாடப்படுவதே வழக்கம்.அந்த நிகழ்ச்சியில் ரத்த தானம் கொடுப்பது,நலத்திட்ட உதவிகள் என்று அவரது ரசிகர்கள் அமர்களப்படுத்துவார்கள். இந்த ஆண்டு பிறந்த நாள் கமலுக்கு ஸ்பெஷல்… அவர் சினிமாவுக்கு 60 ஆண்டுகளை நிறைவு செய்வதால் மூன்று நாள் விழாவாக கொண்டாடும் முடிவில் இருக்கிறார் கமல்.’மக்கள் நீதி
 

நிகழ்ச்சியில் ரத்த தானம் கொடுப்பது,நலத்திட்ட உதவிகள் என்று அவரது ரசிகர்கள் அமர்களப்படுத்துவார்கள்.

உலக நாயகன் கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி தமிழம் முழுக்க கமல் நற்பணி இயக்கத்தின் சார்பாக எளிமையாக கொண்டாடப்படுவதே வழக்கம்.அந்த நிகழ்ச்சியில் ரத்த தானம் கொடுப்பது,நலத்திட்ட உதவிகள் என்று அவரது ரசிகர்கள் அமர்களப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டு பிறந்த நாள் கமலுக்கு ஸ்பெஷல்… அவர் சினிமாவுக்கு  60 ஆண்டுகளை நிறைவு செய்வதால் மூன்று நாள் விழாவாக கொண்டாடும் முடிவில் இருக்கிறார் கமல்.’மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவராக இருப்பதால் அரசியல்வாதிகள் போல் பிரம்மாண்டம் காட்ட முயற்சிக்கிறார் என்று இந்த விழா குறித்து விமர்ச்சிப்பவர்களும் உண்டு! ஆனாலும்,அதைக் கண்டு கொள்ளாமல் சிறப்பாக விழாவை நடத்த அவரது கட்சிக்காரர்களும், ரசிகர்களும் பரபரப்பாக இருக்கிறார்கள்.

நவம்பர் 7-ஆம் தேதி அன்று  கமல் ,தனது தந்தை சீனிவாசனின் சிலையை சொந்த ஊரான பரமகுடியில் திறக்க உள்ளார்.நவம்பர் 8ஆம் தேதி சத்யம் தியேட்டரில் ‘ஹே ராம்’ சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளது.அதற்கு அடுத்த நாள் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவிருந்த இளையராஜா இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக வருகிற 17-ஆம் தேதி அன்று நேரு  இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி தலைமை விருந்தினராக வரவுள்ளார். அது மட்டுமின்றி ஒரு ஸ்பெஷல் ஓவியத்தில் கமல் பல்வேறு கெட்டப்பில் ரஜினி,இளையராஜா,அஜித் மற்றும் விஜய் ஆகியவர்களோடு இருப்பது போல அழைப்பிதழ்கள் வெளியாகியுள்ளது.

இந்த அழைப்பிதழில் ரஜினி,கமல் தவிர முன்னணி ஹீரோக்களான அஜித்,விஜய் புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் இருவரும் இந்த விழாவில் அவசியம் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது! காரணம்,சொந்த பட நிகழுக்கே வராதவர் அஜித்.இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் அதுதான் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

தவிர,ரஜினி,கமல்,அஜித்,விஜய் என்று நான்கு பேரும் ஒரே மேடையில் தோன்றும் அதிசயம் நடந்தால்,அதுவே கொண்டாட்டத்தின் உச்சம்தான்! வருவாரா தல..!?