×

கமலுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி! அடுத்த மாசம் திரும்ப கிடைக்குமா?

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கமல் நடிக்க துவங்கி 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த பிறந்தநாளை கமல் 60 விழாவாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கமல் 60 பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் செய்து வருகிறது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
 
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கமல் நடிக்க துவங்கி 60 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த பிறந்தநாளை கமல் 60 விழாவாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கமல் 60 பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் செய்து வருகிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, கஸ்தூரி, நடிகர் விவேக் உள்ளிட்டோர் டுவிட்டர் வழியே தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வழியே கமல்ஹாசனை தொடர்பு கொண்டு அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். வரும் சட்டசபைத் தேர்தலில் தனிக்கட்சி துவங்கி, ரஜினி போட்டியிடப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் ரஜினியின் இந்த வாழ்த்து பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவின் தலைமையிடம் ரஜினி தனி அன்பு செலுத்தி வந்தாலும், ரஜினியின் ஆன்மிக அரசியலும், கமலும் மய்யமும் இணைந்து செயல்பட முடியாது என்றே அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே சமயம், ரஜினி தனிக்கட்சி துவங்கினாலும், நிச்சயமாக தனியே போட்டியிட மாட்டார் என்றும், ஏதாவதொரு கட்சியுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை எதிர்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் 12ம் தேதி பிறந்தநாளை ரஜினி கொண்டாடும் போது தமிழகத்தில் அரசியல் சூழல் வேறு விதமாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.