×

கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம்: வைரலாகும் அர்ஜுன் கதறி அழும் வீடியோ!

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலைப் பார்த்து நடிகர் அர்ஜுன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலைப் பார்த்து நடிகர் அர்ஜுன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல கன்னட நடிகர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் (66), பெங்களூருவில் நேற்று இரவு காலமானார். சிறுநீரக நோய் காரணமாக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உடல்நிலை தேறிய நிலையில் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த
 

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலைப் பார்த்து நடிகர் அர்ஜுன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலைப் பார்த்து நடிகர் அர்ஜுன் கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல கன்னட நடிகர் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சருமான அம்பரீஷ் (66), பெங்களூருவில் நேற்று இரவு காலமானார். சிறுநீரக நோய் காரணமாக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் உடல்நிலை தேறிய நிலையில்  பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அம்பரீஷின் மறைவையொட்டி, கர்நாடகாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அவரின் உடலுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அமைச்சர்கள், நடிகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பரான அம்பரீஷுக்கு, ரஜினியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அந்த வகையில், அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த நடிகர் அர்ஜுன், அவரின் உடலை பார்த்து கதறி அழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.