கன்டென்ட் இல்லாமல் திணறும் பிக் பாஸ்: மீண்டும் புரொமோவில் ‘கவின்லியா’ காதல்!
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் இந்த ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் ஆஃபருடன் கவின் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதை சற்றும் எதிர்பாராத ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சியில் உறைந்தனர். லாஸ்லியாவோ கண்ணீருடன் கவினை வழியனுப்பினார்.
இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியா கவின் சென்ற சோகத்திலிருந்து வெளிவரமுடியாமல் சோகத்துடன் உள்ளார். அப்போது தர்ஷன், சரிவிடு அதையே யோசிச்சிட்டு இருக்காதே.. என்று கூற, இல்லை அவன் பைனல்ஸ் வர வேண்டியவன். நான் பைனல்ஸ் போகணும்னு எனக்கு இல்ல. நான் அப்பா- அம்மாவுக்காகத் தான் இருக்கேன் என்று லாஸ்லியா கூறுகிறார். அதற்கு தர்ஷனோ, முடிஞ்சி போச்சு. அத பத்தி யோசிச்சு அழுதுட்டு இருக்குறது வேஸ்ட். பத்து நாளுக்கு அப்புறம் உனக்கு என்ன தோணுதோ அத போய் செய்’ என்கிறார்.
கவின் வெளியேறிய பிறகு லாஸ்லியா அழுது முடித்து பின்பு மறுநாள் டாஸ்க் கூட நடைபெற்று முடிந்து விட்டது. இருந்தாலும் கவின் சென்ற அன்று நடந்த விஷயத்தையே மீண்டும் ஒளிபரப்பி டிஆர்பியை கூட்ட முயற்சிக்கிறது பிக் பாஸ் டீம்… என்று வலைதளவாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.