×

கதறி அழுத ரஜினி மகள்! களத்தில் இறங்கிய ரஜினி! 

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினி, முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக பிரபல தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்திருந்தார். நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினி, முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக பிரபல தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்திருந்தார். கணவர் விசாகனுடன் எமிரேட்ஸ் சென்றிருந்த செளந்தர்யா இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் நடைப்பெற்ற திருட்டுப் பற்றி பதிவிட்டிருந்தார். விமான நிலையத்தில் கணவருடன் செளந்தர்யா இருக்கையில், கைப்பை திருடு போனதாகவும்,
 

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினி, முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக பிரபல தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்திருந்தார். 

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினி, முதல் திருமணம் விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக பிரபல தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்திருந்தார். 

கணவர் விசாகனுடன் எமிரேட்ஸ் சென்றிருந்த செளந்தர்யா இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்தில் நடைப்பெற்ற திருட்டுப் பற்றி பதிவிட்டிருந்தார். விமான நிலையத்தில் கணவருடன் செளந்தர்யா இருக்கையில், கைப்பை திருடு போனதாகவும், உடனடியாக இது குறித்து விமான நிலையத்தில் இருந்த காவலர்களிடம் புகார் தெரிவித்ததாகவும் பதிவிட்டிருக்கிறார்.

திருடு போன கைப்பையில் தனது கணவரின் பாஸ்போர்ட் இருந்ததாலும், பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்ய இயலாது என்பதாலும், காவலர்கள் தங்களை விமான நிலையத்தின் அறையில் காத்திருக்கச் சொன்னதாகவும், அடுத்த நாள் மின்னஞ்சல் மூலமாக காவலர்களிடம் இருந்து வந்த தகவலில், விமான நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பழுதடைந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் இது குறித்து பேசிய போது, தனது கைப்பை தொலைந்துப் போனதும், கணவரின் பாஸ்போர்ட் இல்லாமல் பயணத்தைத் தொடர முடியாததாலும், செய்வதறியாது விமான நிலையத்தில் கதறி அழுத செளந்தர்யா அதன் பின்னர் ரஜினியைத் தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் தொலைந்துப் போன தகவலைத் தெரிவித்ததாகவும், ரஜினி தைரியம் சொல்லி எடுத்த நடவடிக்கைக்குப் பிறகே விமான நிலையத்திலேயே தங்கும் அறைக்கு செளந்தர்யாவையும், அவரது கணவரையும் அனுமதித்ததாக கூறினார்கள்.

ரஜினியின் மகள் என்றதும் தங்கும் அறை வசதிகளைச் செய்து தரும் விமான நிலைய அதிகாரிகள் இனிமேலாவது சிசிடிவி கேமராவை பழுதாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அடிக்கடி அந்த விமான நிலையத்தில் திருட்டு நடைப்பெறுகிறது. இதற்கு விமான நிலைய அதிகாரிகளும் உடந்தை என்றும் ரசிகர்கள் பதில் பதிவிட்டு வருகிறார்கள்.