×

கண்டுகொள்ளாத பிரபல நடிகை…நடிகையின் பார்வைக்காக காத்திருந்த டாப் ஹீரோ!?

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்நடிகர் விஜய்யுடன் நடித்த விளம்பரம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்நடிகர் விஜய்யுடன் நடித்த விளம்பரம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை கத்ரீனா கைஃப். இவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் நடிகர் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன்பு கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் ஃபீட் அப் வித் தி ஸ்டார்ஸ்
 

பாலிவுட் நடிகை  கத்ரீனா கைஃப்நடிகர் விஜய்யுடன் நடித்த விளம்பரம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

மும்பை: பாலிவுட் நடிகை  கத்ரீனா கைஃப்நடிகர் விஜய்யுடன் நடித்த விளம்பரம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 

பாலிவுட் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை  கத்ரீனா கைஃப். இவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் நடிகர் விஜய்யுடன் சில வருடங்களுக்கு முன்பு கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் ஃபீட் அப் வித் தி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், ‘நான் கோகோ கோலா விளம்பரத்திற்காக ஊட்டி சென்றிருந்தேன். அப்போது நான் தரையில் உட்காந்து கொண்டு என் செல்போனை மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் முன் யாரோ நின்று கொண்டிருந்தனர்.

நான் போனை பார்க்கும் ஆர்வத்தில் யார் என பார்க்கவில்லை. ஆனால்  அந்த உருவம் அங்கிருந்து நகரவில்லை.அதனால் நான் நிமிர்ந்து பார்த்தேன். அங்கே அந்த நடிகர் நின்று கொண்டிருந்தார். அவர் பெயர் விஜய். அவர் ஒரு தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டார். அந்த நபர் அவ்வளவு எளிமையாக நடந்து கொண்டார். ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அங்கிருந்து கிளம்பிச் செல்வதைச் சொல்லவே அவர் வந்துள்ளார். ஆனால், நான் போனில் பிஸியாக இருந்ததால் அவர் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் காத்திருந்துள்ளார்’ என்று விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் கத்ரீனா. 

 

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளதோடு விஜய்யுடன் கத்ரீனா கைஃப் நடித்த கோகோ கோலா விளம்பரத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.