×

கண்டா வரச்சொல்லுங்க… நடுக்கடலில போய் பாருங்க…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க, பண்டராத்தி புராணம் உள்ளிட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றன. இப்படத்தில் மலையான நடிகையான ரஜிஷா தமிழில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். கர்ணன் திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு நடுக்கடலில் தனுஷிற்கு பேனர் வைத்துள்ளனர் புதுச்சேரியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள். நடுக்கடலுக்கு படகில் சென்ற ரசிகர்கள், அங்குள்ள தூணில்
 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க, பண்டராத்தி புராணம் உள்ளிட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றன. இப்படத்தில் மலையான நடிகையான ரஜிஷா தமிழில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

கர்ணன் திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு நடுக்கடலில் தனுஷிற்கு பேனர் வைத்துள்ளனர் புதுச்சேரியை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள். நடுக்கடலுக்கு படகில் சென்ற ரசிகர்கள், அங்குள்ள தூணில் கர்ணன் பேனரை வைத்து, சுற்றுலா பயணிகளை ஆச்சர்யப்படவைத்துள்ளனர். கடற்கரையிலிருந்து பார்க்கும்போது கடலுக்கு நடுவே பேனர் அமைந்திருப்பது போன்று காட்சியளிக்கிறது. ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

https://twitter.com/Dhanush_Trends/status/1380064655414947841