×

கட்சி தாவல் இங்கே தர்மமடா..! பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ராதாரவி அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். ‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருந்தார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் நடிகர் ராதாரவியை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தது தலைமை கழகம். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சென்னை
 

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ராதாரவி அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார்.

‘கொலையுதிர்க்காலம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.  தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாரவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள் என்றும் அருவருக்கத்தக்க வகையில் மேடையிலேயே பேசியிருந்தார்.

இதற்கு  கண்டனங்கள் வலுத்த நிலையில் நடிகர் ராதாரவியை  திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தது தலைமை கழகம்.  

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ராதாரவி அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், திமுகவிலிருந்து என்னை நீக்கியது தவறு. திமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை இருக்கிறது என்றார். 

இந்நிலையில் நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.  திமுக  அதிமுக என மாறி மாறி கட்சி தாவலில்  ஈடுபட்டு வந்த அவர்  தற்போது இரண்டு கட்சிகளிலிருந்தும் விலகி சென்னை வந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில்  பாஜகவில்  இணைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.