×

கஜா புயல் பாதிப்பு: களத்தில் இறங்கி உதவிய பிக் பாஸ் பரணி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிக் பாஸ் பரணி, நிவாரண பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிக் பாஸ் பரணி, நிவாரண பணிகளில் ஈடுப்பட்டுள்ளார். சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கஜா புயலில் சிக்கி
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிக் பாஸ் பரணி, நிவாரண பணிகளில் ஈடுப்பட்டுள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிக் பாஸ் பரணி, நிவாரண பணிகளில் ஈடுப்பட்டுள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மணப்பாறை பகுதியை பார்வையிட்ட நடிகர் விமல், மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பரணி, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். காலம் காலமாக நமக்கு சோறுபோட்ட டெல்டா விவசாய மக்கள், உணவு குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவரகளது இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க நம்மால் முயன்ற உதவிகளை செய்வோம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.