×

‘ஒரே படத்தில் 20 கெட் அப் ‘ : தசாவதாரத்துக்கு டஃப் கொடுக்கும் விக்ரம் ?!

நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வைக்கோம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘விக்ரம் 58’ . இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வைக்கோம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘விக்ரம் 58’ . இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத
 

நடிகர் விக்ரம் மற்றும் நடிகை  ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வைக்கோம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘விக்ரம் 58’ .

இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் மற்றும் நடிகை  ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில், 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வைக்கோம் 18 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘விக்ரம் 58’ . இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத காரணத்தால் இப்படம் விக்ரம் 58 என்று அழைக்கப்படுகிறது. இதில் கிரிக்கெட் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும்  இர்ஃபான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, கே.எஸ். ரவிக்குமார் மற்றும்  ப்ரதீப் ரங்கநாதனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு புரொடக்ஷன் மற்றும் தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு கேரளா, ஆலப்புழாவில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில், விக்ரம் 20 ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த தசாவதாரம் படத்தில் அவர் 10 ரோலில் நடித்தது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதனை மிஞ்சும் வகையில் விக்ரம் 20 கெட் அப்பில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி வருவது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியான தகவலின் படி அவர் 20 வேடங்களில் நடந்திருந்தால் அது சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஆனால், வெளியான தகவல் உண்மையா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்த படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.