×

ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் தொழிலாளர்கள்.. சிவகார்த்திகேயன் செய்த உதவி!

படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்
 

படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.  இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையை பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கபட்டுள்ளனர். 

 இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குனர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு ஒரு மூட்டை அரசி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், பெப்சி அமைப்பிற்கு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். முன்னதாக நடிகர் சூர்யா குடும்பம்  10 லட்ச ரூபாய்  வழங்கியது குறிப்பிடத்தக்கது.